'நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்! | Tips To Clean Lungs | Healthy Food For Lungs In Tamil | BTTL'

'நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்! | Tips To Clean Lungs | Healthy Food For Lungs In Tamil | BTTL'
05:04 Oct 16, 2021
'நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்! | Tips To Clean Lungs | Healthy Food For Lungs In Tamil |BTTL  நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்.   வெளிப்புற தோற்றங்களில் மற்றும் சுத்தப்படுத்தினால் போதாது. உன் உறுப்புகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.  உள் உறுப்புகளில் கழிவுகள் சேராத வகையில் இருந்தால், ஊழி உறுப்புகள் சீராக செயல்படும்.  அந்தவகையில் நாம் நுரையீரல் ஆனது காற்று, வாகன புகை, சிகரெட் புகை போன்றவற்றால் நுரையீரலில் அழுக்காக படியும். இந்த கழிவுகளை நம் உட்கொள்ளும் உணவுகளை வைத்தே அகற்ற முடியும்.  முதலில் நுரையீரலைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். மனிதன் சுவாசிக்க அத்தியாவசியமானது மூச்சு, உயிர் மூச்சு என்கிறோம். மூச்சு சீராக இருக்க நுரையீரல் தான் முக்கிய காரணம். இந்த நுரையீரலை பாதிப்பில்லாமல் வைத்திருக்கும் வரை மூச்சு சீராக இருக்கும். உடலில் உள்ள முக்கியமான உறுப்பு நுரையீரல் தான். நம் மூக்கின் வழியே சுவாசிக்கும் காற்றானது, மூச்சு குழாய் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. மூச்சுக் குழாய் மார்புப் பகுதியில் இரண்டாக பிரிந்து நுரையீரலுக்கு செல்கிறது. நுரையீரல் பாதிக்கப்படும் போது நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகிறது. பொதுவாக  உலகில் ஏற்படும் பல வகை வைரஸ் தொற்றுகளால், தொண்டையில் வறட்சியையும் அதனை அடுத்து நுரையீரலில் பாதிப்பை உண்டாக்கி, மூச்சு திணறலும் உண்டாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். நுரையீரலை பலமாக வைத்துக் கொள்வதன் மூலம், பல வைரஸ் தொற்றுகளும், மற்ற வியாதிகளில் இருந்து, நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.   நமது நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வகை தொற்று நோய்களையும் நம்மால் எதிர்த்து போராட முடியும்.  நுரையீரலைப் பலப்படுத்த நாம் செய்ய வேண்டிய விஷயங்களை முதல் உணவு வகைகளில் அடங்கும்.  நுரையீரலைப் பலப்படுத்த நாம் உண்ண வேண்டிய உணவுகள்.  Car tenoids சத்து நுரையீரலுக்கு பாதுகாப்பை தரக்கூடியது. இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இதுவும் ஒரு ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது.இது சத்தானது ஆரஞ்சு ,மஞ்சள், சிவப்பு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். அதாவது கேரட், பப்பாளி ,பரங்கி காய், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அதிக அளவில காட்டினாய் சத்து உள்ளது.  பாலை நன்றாக காய்ச்சி மிளகு ஒரு சிட்டிகை நறுக்கிப் போட்டு, அதனுடன் மஞ்சள் சிறுக சேர்த்து குடித்து வந்தால், நுரையீரலுக்கு வலு கிடைக்கும்.  பாலுடன் பூண்டை வேக வைத்தும் குடித்து வந்தால்,பூண்டில் இருக்கும் அலிசின் என்னும் ஆன்ட்டிபயாட்டிக் சத்து நுரையீரல் தொற்றை உண்டாக்கும் வைரஸ் பாக்டீரியாக்களை  அழிக்கும் வல்லமை கொண்டது.  இதனை வாரத்திற்கு மூன்று நாட்கள் குடிக்கலாம்.  உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க அவ்வப்போது அதற்கேற்ற உணவு வகைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.   ஒரு டம்ளர் பாலுக்கு சிறு துண்டு சுக்கு ,கால் டீஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் மல்லி,ஜீரகம், சிறு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கலாம். அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்த உதவும். வாரம் ஒருமுறை இந்த கஷாயம் குடிப்பதை தவறாமல் கடைபிடியுங்கள். இதையே தண்ணீரில் கொதிக்க விட்டும் குடிக்கலாம். இவ்வாறு செய்யும் போது நுரையீரல் பலப்படுத்துவது உடன், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.  தினமும் ஒருவேளை சுக்கு காபி குடித்து வந்தால் நுரையீரல் பலவீனத்தையும், அதன் வீக்கத்தையும் குறைக்க முடியும். அதனால் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி உணவில் சேர்த்துக் கொண்டு வரவும்.  அதுபோல் துளசி தண்ணீரையும் அருந்தலாம். சுவாச பிரச்சினைக்கு துளசி மிகச் சிறந்த மருந்தாகும்.சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு மண்டலத்துக்கு துளசியை மென்று சாப்பிட்டால் சுவாசப் பிரச்சினை சரியாகும்.  மேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்து நுரையீரலுக்கு மிகவும் தேவை. நுரையீரல் மட்டுமல்லாமல் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை வழங்கக் கூடியது இந்த ஒமேகா3 ஃபேட்டி ஆசிட். இது நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உதவும். இந்த ஒமேகா-3  அனைத்து வகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், வெள்ளரி விதை போன்றவற்றில் அதிகமாக காணப்படுகிறது.இந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது உங்கள் நுரையீரல் ஆனது மிகவும் பலமடையும்.   மேலும் உடலில் ஆக்ஸிஜனை முழுமையாக கடத்தி செல்ல வைட்டமின்-சி உதவிபுரிகிறது. நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு அது உதவும்.ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, மாதுளை, சாத்துக்குடி போன்றவை நுரையீரலின் பாதுகாப்பாக இருக்கும்.   Follow Us On  Youtube  : https://www.youtube.com/c/BackToTamilLife FaceBook : https://www.facebook.com/backtotamillife/ Instagram: https://www.instagram.com/backtotamillife/ E-Mail   : [email protected]' 

Tags: how to keep your lungs healthy , Tips To Clean Lungs , நுரையீரலை சுத்திகரிக்கும் உணவுகள்! , Healthy Food For Lungs In Tamil , BTTL , health tips for healthy lungs in tamil , tips or healthy lungs , how to have strong lungs , foods to clean your lungs , BTTLvideos , BTTLhealthtips , tips to incerase lung power , foods to increase lungs power

See also:

comments

Characters